கிழக்கு பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்; திக்கோடையில் தைப் பொங்கல்பெரு விழா!

(எஸ்.நவா)

கிழக்கு- பல்கலை கழக பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் திக்கோடை கிராம அமைப்புக்களின் உடல் உழைப்புடனும் 19.01.2020இ 8.00 அன்று திக்கோடை அம்பாரைப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ள பொங்கல் எழுச்சி விழாவிற்கு வருகை தருமாறு மிக மிக அன்பாக கேட்டு வேண்டிக் கொள்கின்றது கிழக்கு-பல்கலை கழக பழைய மாணவர் ஒன்றியம். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நில பிரதேசத்திலும் இருந்து பலதரப்பட்ட மக்கள் இன மத பேதமின்றி கலந்து கொள்ளவுள்ளனர் என்பதை இத்தால் மகிழ்வுடன் அறியத்தருகின்றது.

அனைவருக்குமாக இச் செய்தியினை பகிர்ந்து ஆதரவு நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர்.