களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய பாலஸ்தாபனம் மற்றும் ஏனைய அறிவித்தலும்.



களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய பாலஸ்தாபனமாது 02.12.2019 காலை 9-50 முதல் 11-15 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலாலய கும்பாபிஷேகம் பாலஸ்தாபனம். 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை மு. 09.15 மணி முதல் சுயம்புலிங்க பிள்ளையார் வழிபாடு புண்ணியாகவாசம் விசேட கணபதி ஹோமம் நடைபெற்றது.
அந்த வகையில் 01.12.2019 மாலை 7 மணி முதல் விநாயக வழிபாடு புண்ணியாகவாசனம் அனுஞ்ஞை வாஸ்து சாந்தி மிருத்சங்கீரணம் அங்குரார்ப்பணம் பாலாலய தீபஸ்தாபனம் கடஸ்தாபனம் கலாகர்சனம் கும்பங்கள் யாக சாலைப்பிரவேசம் யாக பூஜை என்பன நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு பின்னர் பாலாலய பிம்பஸ்தாபனம் நடைபெற்றது பூஜைகள் நிறைவடைதது. 02-12-2019 திங்கட்கிழமை காலை 7.20 மணி முதல் யாகசாலைக்கிரிகைகள்தீபாராதனைவேத தோத்திர திருமுறைப்பாராயணம் நடைபெற்று பாலாலய கும்பாபிஷேகம் (பாலஸ்தாபனம்நடைபெற்றதுதொடர்ந்து அபிஷேகம்அலங்கார பூஜைகளுடன் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

பின் வரும் நாட்களில் அதாவது எதிர்வரும் 11-12-2019 திருக்கார்த்திகை பூஜைகள் இடம்பெறும்.ஆனால் கார்த்திகை திருவிழா இடம்பெறாது.அதற்கு அடுத்த தினம் 12-12-2019 அன்று விநாயக விரதம் இடம் பெற்று காப்பு கட்டுதலும் நடைபெறும்எதிர் வரும் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் ஆலய கும்பாபிஷேகம் இடம் பெறும்.களுதாவளை சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலய மாஹா கும்பாபிசேகம் நடைபெற உள்ளது...