(சசி துறையூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 1651 குடும்பங்களைச்சேர்ந்த 5774 நபர்கள் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடைத்தங்கல் முகாம் மாவட்டத்தில் இதுவரையான (03.12.2019 12) காலப்பகுதியில் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களைச்சேர்ந்த 158 நபர்கள் தர்பலா பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு,
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 38 நபர்கள் நாவற்குடா கிழக்கு முன்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,
அத்தோடு மண்முனை வடக்கில் மொத்தமாக 1016 குடும்பங்களைச்சேர்ந்த 3553 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச்சேர்ந்த 90 நபர்களும்,
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த 2 குடும்பங்களைச்சேர்ந்த 5 நபர்களும்,
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 7குடும்பங்களைச்சேர்ந்த 16 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காத்தான்குடி பிரதேசத்தில் 107 குடும்பங்களும் 384 நபர்களும்,
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் 479 குடும்பங்களும் 1688 நபர்களும்,
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 09 குடும்பங்களும் 32 நபர்களும்,
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் 2குடும்பங்களும் 6 நபர்களும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.