ஊடகவியலாளர்கள் ஊடாக இன நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புதல் செயலமர்வு

இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு மன்றேசா வீதியில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் ஊடாக இனங்களிடையே நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் இந்த ஊடக செயலமர்வு நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் ரி.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சி.சிறிதரன் பிரதான வளவாளராக கலந்துகொண்டு வெகுஜன ஊடகங்கள் மூலமாக சமாதானமும் சமூக நல்லிணக்கமும் தொடர்பான கருத்துரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் செஞ்சலுவை சங்கம் தொடர்பான கருத்துரைகளை அச்சங்கத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான வ.சக்திவேல் நிகழ்த்தினார்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.