போக்குவரத்து இலக்கினைக் கருத்தி கொண்டு கூழாவடி குறுக்கு வீதி புனரமைக்கப்படுகிறது



பொதுமக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் கூழாவடி பார் வீதி இணைப்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பார் வீதி மற்றும் கூழாவடி எல்லை வீதியினை இணைக்கும் குறுக்கு வீதியின் புனரைமப்புப் பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் இன்று (31.12.2019) ஆரம்பித்து வைத்தார்.

பல காலமாக தனியாரால் அடைத்து உரிமை கோரப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பாதையினை மாநகரசபையானது கையகப்படுத்தி பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து இலகினையும் கால வீரயத்தினையும் கருத்தில் கொண்டு புனரமைத்து வருகின்றது.

கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், ம.நிஸ்கானந்தராஜா  மற்றும் துரைசிங்கம் மதன் ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.