போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டம்

 (எஸ்.நவா)
ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய சபிரி கமக் நிறைவானதோர் கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பான பிரதேச செயலகங்கள் தோறும் நடாத்தப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் திங்கட்கிழமை (30) வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஆரம்ப உரையை தொடர்ந்து மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது ‘சபிரி கமக’; வேலைத்திட்டத்தின் பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச அரசியல் உறுப்பினர்கள் சிபாசுடன் நடைபெறவேண்டும்.இவ் வேலைத்திட்டம் கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் விருப்பத்துக்கமைய இத் திட்டத்தனை முன்னெடுக்கவேண்டும்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாடலாவிய ரீதியில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதி ஆனால் சாதாரணதரம் இ உயர்தர பரீட்சை எழுதாத 8ம்தரம் 9;தரம் 10 தரம் படித்துவிட்டு இருக்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் சமுர்த்தி நன்மை பெறுகின்றவர்களும் இவ் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்படுவார்கள்.இவர்கள் அந்தந்த கிராமத்தில் இருக்கின்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றுவார்கள்.ஆனால் இதற்கான சுற்று நிருபமோ அல்லது தகவல் திரட்டப்படுவது.தொடர்பான எந்த வித தகவல்களும் அமைச்சின் ஊடாகவோ ஜனாதிபதி செயலகத்தினாலோ தற்போது இடம்பெறவில்லை அவ்வாறான தகவல்கள் திரட்டப்படுவதாக கூறப்படும் செயல் பொய்யானது என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார்  அரசியல் பிரமுகர்கள் மற்றும் திணைக்கள் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராமிய அமைப்புக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.