செங்கலடி பிரதேசத்தில் கடைகளைவிற்றலை தடுக்க வர்த்தகர்களுக்கு அவசர கூட்டம் - தமிழ் உணர்வாளர் அமைப்பு


செங்கலடி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு கடைகள் விற்றலை தடுக்க வர்த்தகர்களுக்கு அவசர கூட்டம் - தமிழ் உணர்வாளர் அமைப்பு


மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டடில் இன்று செங்கலடி வர்த்தகசங்கத்தினூடாக வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் இன்று செங்கலடி செல்லம்பிரிமியர் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ச.அருண்தம்பிமுத்து,செங்கலடி  வர்த்தகசங்கத்தலைவர் எஸ்.இராஜேந்திரன் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுமார் 50க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன்;. குறிப்பாக செங்கலடி பகுதியில் அன்மைக்காலமாக திடீரென தமிழ் பிரதேசத்தில் காணப்படும் கடைககளை முஸ்லிம்களுக்கு விலைக்கு விற்றல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மாதாந்த வாடகைக்கு கடைகளை வழங்குதலை தடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த கணபதிப்பிள்ளை மோகன் அன்மைக்காலமாக அதிகரித்துவரும் முஸ்லிம்களுக்கு கடைகளை மாதாந்த வாடகைக்கு வழங்குதல் தொடர்பாகவும் அக் கடை உரிமையாளர்கள் இச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். குறிப்பிட்ட சிலர் முஸ்லிம்கள் அதிக பணம்வழங்குவதால் அவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர் இனிவரும் காலங்களில் முஸ்லிம்கள் செங்கலடி மற்றும் அதையன்டிய தமிழ் பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடுக்கவேண்டும் என்றார்.
இதன்போது முஸ்லிம்களுக்கு மாதாந்த வாடகைக்கு கொடுத்துள்ள கடை உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவித்க்கையில் நான் பல மாதங்களாக விளமம்பரப்படுத்தியும் தமிழர்கள் யாரும் கடையை பெறுவதற்கு முன்வராமையினால் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வழங்கவேண்டிவந்தது இருப்பினும் அவர்களை இப்போது அகற்ற முடியாது காரணம் செங்கடிப்பிரதேசத்தில் பலர் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு கடைகளை வாடகைக்கு வழஙகியுளனர் அவர்களை அகற்றக் கூறுங்கள் நானும் அகற்றுகிறேன் என்றார். இதன் போது வர்த்தகர்கள் சிலருக்கும் கடை உரிமையாளர்களுக்கிடையிலும் குழப்பநிலை கூட்டத்தில் உருவானது.

இதன் போது கருத்து தெரிவித்த ச.அருண்தம்பிமுத்து ஏனைய பிரதேசங்களைப்போல் எமது பிரதேசத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதை அனைவரும் சிந்தித்து பொறுப்புனர்ச்சியுடன் நடந்தாலே இவற்றிணைத்தடுக்கலாம் எனவும் திருகோணமலை முற்றாக பறிபோகும் நிலையிலுள்ளது வாகரையில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவிற்கு ஒருதீவையே விலைக்கு கொடுத்துள்ளனர் என்பது பரவலாக பேசப்பட்டுவருகிறது இவ்வாறான நிலைமை எமது பிரதேசத்தில் இடம்பெறக்கூடாது எனப்பல கருத்துக்களை முன்வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய வர்த்தகசங்கத்தவைவர் எஸ். ராஜேந்திரன் செங்கலடி பிதேச சபை தலைவர் நா.கதிரவேல் செங்கலடி வர்த்தக சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட் டையும் முன்வைத்தார்.  

குழப்பமாக சென்ற கூட்ட முடிவில் முஸ்லிம் வர்த்கர்களுக்கு கடைகளை மாதாந்த வாடைகைக்கு வழங்கிய கடை உரிமையாளர்கள் கடையை தமிழருக்கு வாடகைக்கு வழங்கும் முடிவுக்கு சம்மதம் எனக்கூறினார்கள். இதேவேளை அனைத்து வர்த்தகர்களும் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
  ஏனைய வேறுசில கடை உரிமையாளர்களும் இனிவரும்காலத்தில் கடை வழங்கமாட்டோம் என்ற முடிவையும் அறிவித்தனர்.