கர்நாடக இசை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சாணக்கியன் பாராட்டு தெரிவிப்பு.





கர்நாடக இசை போட்டியில் மூன்றாவது இடத்தினை பெற்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் பாராட்டு .

கண்டியில் நடைபெற்ற தேசிய மட்ட  கர்நாடக இசை பாடல் போட்டியில் மூன்றாவது இடத்தினை தட்டிக்கொண்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு நேரில் சென்று பாராட்டுக்களையும்  வாழ்த்தினையும் தெரிவித்தார் இராசமாணிக்கம் தொண்டு நிறுவனத்தின்  தலைவர் இரா.சாணக்கியன்

இதன்போது கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன் மஞ்சந்தொடுவாய் கிராமம்  மிகவும் கஷ்டமான நிலையில் நகரை அண்டியுள்ள  வறுமை கோட்டிற்குட்பட்ட மக்கள் வாழும்  கிராமம் என அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில் உள்ள ஒரு பாடசாலையில் கற்ற மாணவர்கள்  இப்படிபட்ட ஒரு நிகழ்வுக்கு செல்வது உண்மையில்  வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.


 தமிழ்மக்களின் கலாசாரம் சார்ந்த கர்நாடக இசை போட்டியில்  தேசிய மட்டத்தில் சாதித்தல் இலகுவானதல்ல, கடந்த வருடத்தில் இதே மாணவர்கள்  இரண்டாம் இடத்தை பெற்றதாக நான் அறிவேன்  ஆனால் அவை  தொடர்பாக செய்திகளில் வந்தமை குறைவாகவே உள்ளது.

 எதிர்காலத்தில் நிச்சாயமாக இந்த கிராமத்தை நான் விசேட கவனத்தில் கொள்வேன் எனவும் தெரிவித்தா.

போட்டியில் கலந்துகொள்ள செல்வதற்க்காக சென்ற மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் இதர வசதிகளுக்கான பொறுப்புக்களை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டமை கொண்டமை குறிப்பிடத்தக்கது .