இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கிவைப்பு



இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கிவைப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  வறிய மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.


இந்நிகழ்வுக்கு  இன்று (21.11.2019)வியாழக்கிழமை ஓந்தாச்சிமடம் விநாயகர் மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் ஆர்.புண்ணியராஜா தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் கலந்து கொண்டார் இதன்போது வறிய மாணவர்கள் 32 பேருக்கு ஆயிரம் ரூபாய் பெருமதியான வங்கிக் கணக்கு புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில் இப்பாடசாலையில் காலை ஒன்று கூடல்லானது தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் நிகழ்த்தப்படுகின்றது ஆங்கில மொழி சர்வதேச மொழியாக இருப்பதனால் அவ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது எமது பகுதியில் குறைவாக இருக்கிறது.இப்பாடசாலையில் ஆங்கில மொழியில் நிகழ்த்தபடுவது பாராட்ட தக்கவிடயம் மேலும் கூடிய நேரம் ஆங்கில மொழியில் இவ்வாறான விடயங்களை செய்தால் மாணவர்களுக்கு ஊக்கிவிப்பாக இருக்கும் ஆங்கில மொழியினை கற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும். மேலும்பத்தாயிரம் வைப்பு செய்யும் மாணவர்களுக்கு இராச மாணிக்கம் மக்கள் அமைப்பினால் 10%மேலதிகமாக வைப்பு செய்யப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்