காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி சூரையடி பகுதியில் உள்ள மக்களுக்கான காணி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு செயலமர்வு  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நே.விமலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி சூரையடி பகுதியில் காணி சீர்த்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் 10 வருடங்களுக்கு மேலாக காணி உறுதியை வழங்குவதற்கும் காணியற்றவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் ஏற்கனவே காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிக்கு உரிய ஆவணங்களை கொண்டிராதவர்களுக்கு காணிக்கான உறுதியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.