(சசி துறையூர் )
இம் முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி இன்று (30.11) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
மண்முனைதென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அமரசிங்கம் தயாசீலன் அவர்களின் நெறிப்படுத்தலில் மண்முனை தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பூசை வழிபாட்டில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஜநூறுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசி வேண்டி எம்பொருமான் தான்தோன்றி ஈசனின் சன்னிதானத்தில் விசேட பூசை இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈசனின் பாதத்தில் பூசிக்கப்பட்ட பேனாக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பூசை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள், மற்றும் சிவ ஸ்ரீ சோதிலிங்கம் குருக்கள் ஆகியோர் மேற்கொண்டதுடன் , ஆலயத்தின் பரிபாலன முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.