இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் இளைஞர்கள்.
இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளநீரில் மூழ்கிய வீதிகளை பொதுமக்களின் நன்மை கருதி நீரை வெளியேற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது.
இப் பணி வட்டார மாநகரசபை உறுப்பினரும் மட்டு வாலிபர் முன்னணி உபதலைவருமான து. மதன், மட்டு வாலிபர் முன்னணி தலைவரும், கிராம அபிவிருத்தி சங்க செயலாளருமான லோ. தீபாகரன் மற்றும் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது மழை காலம் என்பதால் மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது, இதனை மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபை ஊழியர்கள் கால்வாய் வெட்டி நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.