களுவாஞ்சிகுடியில் மியோவாக்கி காடுவளர்ப்பு -வெற்றிகரமாக முன்னெடுக்கிறது பிரதேச செயலகம்

இந்த நாட்டில் இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்கால சமூகத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மியோவாக்கி என்னும் விஞ்ஞானியினால் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தினை இலங்கையில் முன்முறையாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மியோவாக்கி காடு வளர்ப்பு திட்டம் இன்று காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் களுவாஞ்குடி வடக்கு 1 பிரிவில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி  பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இதன்போது சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரங்கள் நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் நடப்பட்டது.

குறுகிய நிலப்பரப்பிற்குள் அடந்த காட்டினை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.