மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் முதியோர் தினம் துறைநீலாவணையில்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.


சிறுவர் முதியோர் தின விழாவில் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  M.G.U.L.குணவர்த்தன கலந்துகொண்டார். இதன்போது வரவேற்பு நடனத்தை நர்த்தனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது சிறுவர் உரிமை பற்றிய வாசகங்களை காட்சிப்படுத்தல் நிகழ்வும் சிறுவர்களுக்கான பட்டம் விடுதல் போட்டியும் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்களின் விவாதப் போட்டியும் தேற்றாத்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் வீதி நாடகமும் இடம்பெற்றதுடன் முதியோருக்கான நடனப் போட்டி இடம்பெற்றது அத்துடன் முதியோருக்கான கௌரவிப்பும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்