மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வித்தியாரம்பம்

முப்பெரும் தேவிகளான சரஸ்வதி,துர்க்கை,இலட்சுமி ஆகியோரை நோக்கி விரதமிருந்து அனுஸ்டிக்கும் நவராத்திரி தினத்தின் இறுதி தினமான விஜயதசமியை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்ததராஜ குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள்,யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வயதினை ஊடைய பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் வித்தியாரம்பத்தில் கலந்துகொண்டனர்.