சுவிஸ் உதயம் அமைப்பினால் தொடர்ந்தும் உதவிக்கரம்

ஜனாதிபதி தேர்தல் என்னும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மகளிர் அணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் உதவியுடன் கல்லடிஉப்போடை நாகபுரம் மற்றும் புன்னச்சோலை பகுதிகளில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

சுவீஸ் உதயத்தின் தலைவர் சுதர்ஷன் அவர்களின் பிள்ளைகளின் அனுசரணையில் கல்லடி உப்போடை நாகபுரம் மற்றும் புன்னச்சோலை பகுதிகளில் வறிய ஏழு குடும்பத்தினருக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்கு கிளை தலைவர் எஸ்.விமலநாதன் மற்றும் மகளிர் சமாஜத்தின் செயலாளர் திருமதி. நற்குணநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு,கல்வி நடவடிக்கைகள்,அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

தமிழ் மக்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தால் தமக்கான அபிவிருத்திகள் ஏற்படும் என்பதை உணர்ந்து வாக்களிக்கவேண்டும் எனவும் இதன்போது திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.