மாமாங்கேஸ்வரர் அறநெறி பாடசாலையில் நவராத்திரி விழா

நவராத்திரியை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் அறநெறிப்பாடசாலையின் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது.
மாமாங்கேஸ்வர் ஆலய இந்து சமய அபிவிருத்தி மன்ற அறநெறிப்பாடசாலை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நவராத்திரி தினம் அனுஸ்க்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாணி விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்,மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்மார்கள்,நிhவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நவராத்திரி தொடர்பான உரைகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.