மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம் மீண்டும் சாதனை படைத்தது


 (எஸ்.நவா)

மத்திய கல்வி அமைச்சும் AAT நிறுவனமும் இணைந்து இலங்கை பாடசாலைகளுக்கிடையே வருடா வருடம் நாடாத்தி வரும் சிறந்த வருடாந்த அறிக்கை போட்டியிலே தொடர்ந்தும் மூன்றாவது வருடமாக 2019ம் ஆண்டிலும் விருதினை வென்று தொடர் சாதனை படைத்துள்ளது. இவ்வித்தியாலயம் 
அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் நல்வழி நடாத்துதலில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இவ்வித்தியாலயத்துக்கு இவ் விருதும் மேலுமொரு சான்றாகும்.
அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவ்விருதுக்காக தெரிவான ஆறு பாடசாலைகளில் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து தெரிவான ஒரே ஒரு பாடசாலை இதுவாகும் என்பதும் குறிப்பித்தக்கது.

2017ம் ஆண்டில் சிறந்த ஆண்டறிக்கைக்கான விருதினை பெற்ற இவ்வித்தியாலயம் 2018ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3ம் இடத்தினை வெண்கல விருதாக பெற்று முன்னேற்றம் கண்டதோடு 2019ம் ஆண்டு மேலுமொருபடி முன்னேறி 2ம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுவீகரித்தமைக்காக வெள்ளி விருதினையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.

28.10.2019 அன்று கொழும்பு BMICH யில் நடைபெற்ற மேற்படி விருது வழங்கும் விழாவில் பாடசாலையின் பிரதியதிபர் ஆசிரியர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் கலந்து கொண்டு இவ்விருதினை பெற்றிருந்தனர்.

இவ்விருது பெற்று சாதனை படைத்து வரும் இப் பாடசாலையினை பாடசாலைச் சமூகம் பாராட்டுவதோடு தொடர்ந்தும் இச் சாதனையை புரிவதற்காக ஊக்குவித்து வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றது.