மண்டுர் பூணன் குளம் அழகுபடுத்தும் வேலைத்திட்டம்

 (வெல்லவூரான் எஸ்.நவா)

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைபடுத்தப்படும் பிரதேச செயலக மட்டத்தில் பசுமை கழகங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழு; மண்டுர் பூணன் குளத்தை அழகுபடுத்தி மரக்கன்றுகளை நடுதல் நிகழ்வின் ஆரம்ப வைபவம் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் விவசாய உத்தியோகத்தர் பெரும்பாக உத்தியோகத்தர் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சுற்றாடல் அதிகாரி உள்ளூராட்சி உதவியாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பசுமை கழக உறுப்பினர்கள் கிராம மட்ட அமைப்புக்கள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் வேலைத்திட்டத்துக்கு நிதி அமைச்சினால் 1.35மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.