2019 ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் முறை வெளியீடு


(புருசோத்)
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் நாற்பதற்கும் மேற்பட்ட கட்சி சார்பாக வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர் வரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ள தேர்தல் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த தேர்தலில் போட்டி இடுகின்ற வேட்பாளர் ஒருவர் 50% க்கும் அதிகமான வாக்குகளை  பெற வேண்டும் அப்படி    பெறுகின்றவர்களே இந்த நாட்டின் உடைய ஜனாதிபதியாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என்பதும் குறிப்பிட தக்கது. இந்த தேர்தல் ஆனது வேட்பாளர்களுக்கு போட்டியாகவே இந்த தேர்தல் களம் அமையும் என்பதும் எந்தவிதமான ஐயமும் இல்லை  இந்த தேர்தலில் போட்டிகள் அதிகம் ஆகும் பச்சத்தில் விருப்பு வாக்குமுறையை நடைமுறைபடுத்தி உள்ளார் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய என்பதும் குறிப்பிட தக்கது .

இம்முறை தேர்தலில் விருப்பு வாக்குமுறை மூலம் மக்களை தெளிவு படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். தேர்தலில் போட்டி இடுகின்ற கட்சிகள் உதாரணமாக A,B, C,D,E,F இருக்குமாயின் அந்த கட்சிக்கு நேரே புள்ளடி இடவேண்டும் அல்லது உங்களுக்கு விருப்பமான கட்சியே அல்லது வேட்பாளரோ மூன்று நபரை தெரிவுசெய்து 1, 2, 3 என அந்த  கட்சிகளுக்கு நேரே இலக்கம் இட வேண்டும். கீழே படத்தில் காட்டியவாறு வாக்காளர்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.