திருகோணமலை,மட்டக்களப்பு பழைய மாணவர்கள் செய்த செயல்

மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மற்றும் திருகோணமலை உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வொன்றை இன்று நடாத்தினர்.

மட்டக்களப்பு பார் வீதியில் கைவிடப்பட்டிருந்த சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு இந்த மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மற்றும் திருகோணமலை உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி பழைய மாணவர்கள் வருடாந்தம் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்கீழ் இன்று காலை பார் வீதியில் கைவிடப்பட்டிருந்த சிறுவர் பூங்கா சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் பயன்தரு மரங்களும் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மற்றும் திருகோணமலை உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி பழைய மாணவர்கள் பங்குகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட் போட்டியொன்றும் நடாத்தப்பட்டுவருகின்றது.