மட்டு வாலிபர் முன்னணியின் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை .மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான புனானை கிழக்கில் அமைந்துள்ள அறுபது வருடங்கள் பழமைவாய்ந்த இலுக்குப்புல்குளம்
ஸ்ரீ விநாயகர் ஆலயம் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று  (13.09) சிரமதானம் செய்யப்பட்டது.


மட்டு வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற  ஆலய வளாக துப்பரவு  சிரமதானப்பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டு மாநகர முதல்வர் எஸ்.சரவணபவான், முன்னால் மாகாண சபைஉறுப்பினர் மா.நடராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள்,  வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் உட்பட வாலிபர் முன்னணி அங்கத்தவர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் , கிராம இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.எல்லைப்புறத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் அண்மைக்காலமாக சமூக விரோதிகளால் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வந்த நிலையில் ஆலய பரிபாலன சபை விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.