மட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி


(செங்கலடி நிருபர்)

மட்/மட் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி.விமலநாதன் வினுஜிகா தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பிரிவு5 தமிழ் தினப்போட்டியில் தேசிய நிலைப் போட்டிகள் 2019 கவிதைப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

மாணவி செல்வி.விமலநாதன் வினுஜிகா அவர்களை மட்/மட் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே.சிறிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பெருமையுடன் வாழ்த்துகின்றனர்.