பிள்ளையாரடியில் விபத்து - வேகம் ஏற்படுத்திய ஆபத்து

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையப்பிரிவுக்குட்பட்ட இன்று மாலை பிள்ளையாரடியில் வானும் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனம் வானுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்கப் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்காரணமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத போதிலும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.