மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் சுதந்திரமாக தமது கடமையினை முன்னெடுக்கும் நிலையினை உருவாக்கிதரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் வேண்டுகோள்விடுத்தார்.
அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நம்பிக்கையுடன் வேலைசெய்வதற்கு அனுமதித்தால் நாங்கள் இந்த சமூகத்தின் நம்பிக்கைக்குரியவராக செயற்படமுடியும்.ஆரம்பத்திலேயே குறித்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியான தடைகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விடயம் எங்களது கைகளைமீறிச்சென்றுள்ளது.
உண்மையில் அங்கு புதைக்க நாங்கள் யாருமே கூறவில்லை.எனக்கும் தெரியாது,மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் தெரியாது.ஆனால் எங்கள் இருவரையும் குற்றஞ்சாட்டியே செய்திகள் வெளிவந்தன.
மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அக்கரையுள்ளவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்துசெயற்படவேண்டும்.கள்ளக்களவாக அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்றவர்கள் அங்கு தமது குடும்பத்தினையும் அழைத்துக்கொண்டு நல்ல சொகுசா வாழ்ந்துகொண்டு மட்டக்களப்பு மக்களைப்பற்றி கதைக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஒரு ஆணும்பெண்ணும் இருந்துவாசிக்கமுடியாதவாறு மிகவும் கேவலமான முறையில் எழுதுகின்றனர்.இதுவெல்லாம் எங்களுக்கு இருக்கின்ற புறத்தடைகளாகும்.அரசாங்க உத்தியோகத்தர்கள் வேலைசெய்வதற்கு இருக்கின்ற தடைகள்.இந்த செய்திகளில் உள்ளதைப்பார்க்கும்போது நானும் முதல்வரும் தற்கொலைசெய்யும் அளவுக்கு உள்ளது.எங்களை சுதந்திரமாக கடமையாற்ற அனுமதிக்கவேண்டும்.அதற்கு இந்த சிவில் சமூக அமைப்புகள் அதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டும்.
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் உள்ள மயானங்களை நான் மாநகர ஆணையாளராக இருந்தபோது நான் நேரடியாக களத்தில் நின்று அதனை தூய்மைப்படுத்தி,அழகுபடுத்தி செய்தவன் நான்.இது மயானத்தினை ஒரு கோவில்போன்று அழகுபடுத்தி வைத்திருந்தேன்.கள்ளியங்காடு மயானத்தினை என்னைப்போன்று நேசித்தவன் யாரும் இருக்கமுடியாது. அவ்வாறு செயற்பட்ட என்னை மிகவும் கேவலமான முறையில் சிலர் முகப்புத்தகங்களில் எழுதிவருவது கவலையான விடயமாக இருக்கின்றது.
அம்பாறை சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த தற்கொலைதாரிகளின் 15 உடலங்கள் அம்பாறை உகன சிங்கள மயானத்திலேயே தாக்கப்பட்டது.அதேபோன்று கட்டுவாப்பிட்டி நீர்கொழும்பு பொதுமயானத்தில் தாக்கப்பட்டது.
இது தொடர்பிலான விடயங்களை எங்களுடன் நேரடியாகவந்து கதைத்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளமுடியும்.மக்களை குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவதனால் எதுவும் நடந்துவிடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கரை வருடத்தில் அரசாங்கத்தினால் பெரிய திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. எதுசரி எது பிழையென்று பாராது எந்தவிடயம் செய்வது என்றாலும் எதிர்ப்பினை தெரிவிக்கும் நிலையே இருந்துவருகின்றது.
சிவில் அமைப்புகள்,மதத்தலைவர்கள் இந்த நிலைகளை மாற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தினை நாங்கள் என்றும் கட்டியெழுப்பமுடியாது.