மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்புபோராட்டத்தினை மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடாத்தினர்.
கடந்த 27ஆம் திகதி இரவு கல்லடி பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் தாக்கப்பட்டதற்கு எதிராக கண்டனங்கள் இங்கு தெரிவிக்கப்பட்டன.
அத்துடன் இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைத்தற்கும் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த போராட்டத்தில் மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவை, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடாத்தி ஜனநாயகத்தின் குரல்வளையினை நசுக்காதே,தாக்காதே தாக்காதே மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே,வேண்டும் வேண்டும் நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.