சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய இராஜகோபுரத்திற்க்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று.





இயற்கை எழில் மிகு ஈழமணி திருநாட்டின்
கிழக்கே செந்நெல் விழை நிலமும்
கயல் மீன் ஓசையும்
கரையேறத் துடிக்கும் கடல் அலை தேசம்
மட்டுமாநகரின் வடக்கே
சைவமும் தமிழும் தழைத்தோங்கும்
சந்திவெளி பதிமண்
ஆல்,வேல்,மகிழை புடைசூழ
அமர்ந்தருள் புரிந்து
தேரோடும் திருத்தலமாய்
பார்போற்ற வந்தமர்ந்த
பஞ்சதள இராஜகோபுர நாயகன்
ஸ்ரீ புதுப்பிள்ளையார் புண்ணிய தளத்தில்
தெற்கு வாசல் இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவும்
சுற்றுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று 1.09.2019 காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.


நிகழ்வில் ஆலய அறங்காவல் சபையினரும், கிராமத்தின் பொது அமைப்புக்களும்,
பொது மக்களும் , அதிதிகளாக மட்டு மாநகர நகர பிதா தி .சரபணபவான். முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  கி.துரைராசசிங்கம் ,
பிரதேச சபை உறுப்பினரும், இ.த.கட்சியின் வாலிப முன்னணி தலைவர்   கி.சேயோன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.