சித்தாண்டி4 பழைய சந்தை வீதி பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களின் கம்பரளிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று (27.08) செவ்வாய்க்கிழமை மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
மட்டு மாவட்ட வாலிபர் முன்னனியின் மாற்றுதிறனாளிகள் துறைசார் பொறுப்பாளரும் சித்தாண்டி கிளைக்குழு செயலாளருமான சோபனன் தலைமையில் நடைபெற்ற கையளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஷ்வரன், சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் முரளிதரன், சித்தாண்டி வானவில் விளையாட்டு கழக ஸ்தாபாகர் சத்தியவரதன், சித்தாண்டி இளஞ்சைவ மாணவ மன்ற தலைவர் உதயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழரசு கட்சியின் சித்தாண்டி கிளைகுழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வீதி புனரமைப்பு வேலைகளுக்காக இரண்டு மில்லியன் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .






