வெல்லாவெளி அருள்மிகு மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான அன்னதான மண்டபம் அடிக்கல் வைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் (03) சனிக்கிழமை ஆலய தலைவர் சி.கருணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் இந்து விவகார அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும்; சட்டத்தரணி மு.கணேசராசா உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் முன்னால் ஆலய தலைவர் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் சிரேஸ்ட விரிவுரையாளர் வ.மேகநாதன் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி கி.சே.உத்தியோகத்தர் திரு இம்சன் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் கிராமத்தில் உள்ள அமைப்புக்கள் சங்கங்கள் கழகங்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்று வெல்லாவெளி அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலயம் விளங்கிக்கொண்டிருக்கின்றது இவ்வாலையத்திற்கான அன்னதான மண்டபம் ஒன்று இல்லாமை இருந்த வேளையில் ஆலய நிருவாகம் விடுத்த கோரிக்ககைக்கு அமைவாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் இந்து விவகார அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் நிதி ஒதுக்கீட்டிலிருந்து முதற்கட்டமாக 1.9 மில்லியன் செலவில் அமைக்கப்படும் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது