எதிர்வரும் ஆகஸ்ட் 23 சர்வதேச இளைஞர் தினம் இத்தினத்தை முன்னிட்டு இலங்கை இளைஞர்கழக சம்மேளனத்தினால் மாபெரும் ""யொவுன் வாசனா " அதிஸ்ட இலாப சீட்டிலுப்பு ஒன்றினை நடாத்தி பெறுமதி மிக்க பரிசில்களை இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளனர்.
இலங்கை இளைஞர் அபிவிருத்தியில் முன்னோடியாகவும், முதன்மையாகவும் செயற்படும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தனது கிராம மட்ட முதன்மை அமைப்பான இளைஞர்கழகங்களை வலுவூட்டுவதற்க்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்க்காக நிதியமொன்றை ஆரம்பிப்பதற்க்காகவும் குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
அந்த வகையில் சீட்டிலுப்பானது எதிர்வரும் 26.09.2019 அன்று ஆரம்பமாகவுள்ள 33வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு வைபவத்தின் போது நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறுவோர்க்கு
முதலாவது பரிசு புத்தம் புதிய வரவு பல்சர் மோட்டபைக்.
இரண்டாவது பரிசு நவீனரக ஸ்கூட்டி மோட்ட பைக்.
மூன்றாவது பரிசு பெறுமதியான மடிக்கணினி
ஜந்து ஆறுதல் பரிசுகள், ஸ்மாட் கையடக்கத் தொலைபேசி. என்பன வழங்கப்படவுள்ளன.
அத்தோடு அதிகூடிய அளவில் நிதி திரட்டும் பிரதேச சம்மேளனங்களுக்கும், (பிரதேச செயலாளர் பிரிவு) பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
