கிரான் பிரதேச இளைஞர்களுக்கு போசாக்கு குடும்ப மகிழ்ச்சி வேலைத்திட்டம் ஆரம்பம்.



கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர்களுக்கான இரண்டு நாள் வதிவிடத்துடன் கூடிய போசாக்கு குடும்ப மகிழ்ச்சி வேலைத்திட்டம் இன்று புதன் கிழமை (21.08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  
சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கிரான் பிராந்திய உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் வி.தருமரெத்தினம், உலக தரிசன நிறுவத்தின் கிரான் பிரதேச முகாமையாளர் கிந்து றோகாஸ், திட்ட இணைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றியுள்ளதோடு இவர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இளைஞர் கழகத்தின் ஊடாக முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிவூட்டப்படவுள்ளதாகவும் கிரான்பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன் எமக்கு தெரிவித்தார்.