மட்டக்களப்பு மாவட்ட முன்னோடி இளைஞர்கள் அறுவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம்.






மட்டக்களப்பு மாவட்ட முன்னோடி  இளைஞர் யுவதிகள் அறுவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


கிராம மட்ட இளைஞர் கழகங்களின் ஊடாக பிரதேச மாவட்ட ரீதியில் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் அபிவிருத்திப்பணியில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த முன்னோடி இளைஞர் யுவதிகள் அறுவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசின் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடாந்தம் இலங்கை இளைஞர் அபிவிருத்திப்பணியில் அர்ப்பணிப்பு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் யுவதிகளை நாடளாவிய ரீதியாக  தெரிவு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி மற்றும்  சர்வதேச அனுபவப்பகிர்வுக்கான வாய்ப்பை  ஏற்படுத்தி இலங்கை அபிவிருத்திக்கு இளைஞர் சக்தியை பெற்றுக்கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் மற்றும் முழு இலங்கையிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகளுக்குமான முதல்கட்ட பத்து நாள்  பயிற்சி வேலைத்திட்டம் கடந்த 02.07.2019 தொடக்கம் 12.07.2019 ம் திகதிவரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேகாலை மாவட்ட, அவிசாவளை  பட்டங்கலை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

ஆங்கில மொழி,  உடல் வலுவூட்டல் பயிற்சிகளை நிறைவு செய்த குறித்த இளைஞர் யுவதிகள் இன்னும் சில வாரங்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஜப்பான், மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணங்களை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள்.

01.த.விமலராஷ்
செழுஞ்சுடர் இளைஞர் கழகம்
கொத்தியாபுலை,
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசம்.


02.சு.விதுசன்
சக்தி இளைஞர் கழகம்
மகிழுர்முனை 110பீ
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம்.


03.j. M சாஜித்
வுளுமூன் இளைஞர் கழகம்.
ஏறாவூர் 190பீ
ஏறாவூர் நகர் பிரதேசம்.


04.MH. M. அஷீம்
அல் முபாறக் இளைஞர் கழகம்
காகிதநகர்
ஓட்டமாவடி
கோறளைப்பற்று மேற்கு பிரதேசம்.


05. சி.தரண்யா
விவேகானந்தா இளைஞர்கழகம்
அம்பிளாந்துறை வடக்கு
மண்முனை தென்மேற்கு பிரதேசம்.



06.க. தனுஸ்
விநாயகர் இளைஞர்கழகம்
தம்பலாவத்தை
போரதீவுப்பற்று பிரதேசம்.