கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம் மனோகணேசனினால் தாழங்குடாவில் திறந்து வைப்பு

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம் (22.07.2019) திங்கட்கிழமை மட்டக்களப்பு தாழங்குடாவில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசனின்  அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில்  தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர்களான இ.ரவீந்திரன், சக்திகலா ரூப சிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் திருமதி சகோஜி பெரேரா, கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.கோபிநாத் உட்பட அமைச்சின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சர் மனோகணேசன் அவர்கள் அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைத்து அலுவலக செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் அலுவலகம் இங்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.