புணானை விநாயகர் ஆலயத்தை புணரமைத்து தமிழர் உரிமையை மீட்க உதவி கோரல்





மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இலுக்குப்புல் குளம் ஜயந்தியாய புணானை கிழக்கில் இந்துக்களின் தனித்துவத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் சூழலில்  அமைந்த அழகிய  ஆலயம்  ஸ்ரீவிநாயகர் ஆலயம்.

ஆலயத்தை சூழ உள்ள மக்களால்  தமிழர் இந்து  கலாசார பாரம்பரிய வழிபாட்டு முறைகளை பேணிக்காத்து  வழிபடப்பட்டு வந்த  இவ்வாலயம் இன்று எவருமே சென்று வழிபாட்டினை செய்ய முடியாத அளவுக்கு இன்னுமொரு சமூகத்தின்  ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் பெரிதும் ஆதங்கமடைகின்றனர்.

சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்த மக்களுக்கு தமது வழிபாட்டு தலம் பறிபோவதைக்கண்டு அச்சத்துடன், விரக்தியும் ஏற்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசியல் தலைமைகள்  கவனத்தைசெலுத்தி ஆலயத்தை மீட்டுத்தர மண்டாடுகின்றனர்.

மேலும் இவ்வாலயத்தின் காணியானது திட்டமிட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆலயத்தின் பின் பகுதியில் உள்ள முஸ்லீம் கிராமத்திற்ருச் செல்லும் பாதையாக உள்ளது. இதனால் வீதியின் கிழக்குப் பக்கத்தில் 1969 ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆலய கிணறும் மேற்குப் பக்கம் தற்போதுள்ள ஆலயமும் உள்ளது.

மக்களின் அச்சத்துக்கு காரணம்.
ஆலயமானது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் நிர்வாக அலகின் கீழே கண்காணிக்கப்படுகிறது.

இவ் ஆலயம் அமைந்துள்ள பகுதிகள் கோறளைப்பற்று  வடக்கு வாகரை பிரிவினுள் அடங்கும் போது ஏன் இவ்வாலயம்  அமைந்துள்ள பகுதி நிலத்தொடர்பற்றவகையில்  உள்ள கோறளைப்பற்று மத்தி பிரிவில் நிர்வகிக்கப்படவேண்டும் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுகின்றது.


இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து  சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அதே பக்கத்தில் புணாணை புகையிரத நிலையத்திற்கு எதிரேஉள்ள வீரையடி பிள்ளையார் ஆலயம் வாகரை பிரதேசத்தில் அடங்கும்போது ஏன் இவ்வாலயம் கோறளைப்பற்று மத்தி பிரிவில் நிர்வகிகக்க பட வேண்டும்......?
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் புணாணை கிழக்கு 211B எனும் கிராம அலுவலர் பிரிவு உள்ளது. 

அதுபோன்றே கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிலும் புணாணை கிழக்கு 211B எனும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளது. 

இரு வேறுபட்ட பிரதேச செயலக பிரிவுகளில் சம இலக்கத்தை கொண்ட ஒரே பெயரை உடைய புணாணை கிழக்கு கிராம அலுவலர் பிரிவு இயங்குவது சாத்தியமாகுமா.......?

இவ் விடயம் தொடர்பாக  நடவடிக்கை  எடுத்து  கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவினுள் இவ்வாலயத்தை கொண்டுவர   அனைவரும்  முன்வர வேண்டும்.

மேலும் இவ்வாலயம் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவிலக்கம் HA/5/BT/932 எண்ணில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆலய வங்கிக்கணக்கு விபரம்.
கணக்கின் பெயர்- ஸ்ரீவிநாயகர் ஆலய பரிபாலனசபை, இலுக்குப்புல் குளம், ஜயந்தியாய, புணாணை கிழக்கு.
கணக்கிலக்கம் - 340-2-001-1-0030131
வங்கி - மக்கள் வங்கி , ஓட்டமாவடி.