ஆயித்தியமலை வடக்கு விஷ வைத்தியர் வீதி கொங்கிறிட்வீதியாக (125M) புனரமைப்புச்செய்வதற்க்கான ஆரம்ப நிகழ்வு இன்று (26.07) காலை நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகராசா மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், மண்முனை மேற்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்துண்டு குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் கம்பரளிய திட்டத்தினூடான பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் வேலைத்திட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





