மட்டக்களப்பில் பிரபல வர்த்தக நிலையத்தில் பாரிய தீ

மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் மற்றும் படையினர்,பொலிஸார் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த பகுதியில் பெருமளவான படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை மட்டக்கள்பபு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.