அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களே தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர்.



அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களே தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை என்ன?
அது எதனை நோக்கி பயணிக்கிறது என்பதை தெரிந்து கொண்டுதான் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தேர்தலுக்கு  விண்ணப்பிக்க வேண்டும்.

மாறாக
தேர்தலில் வெற்றி பெற்ற பின் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுகிறது, தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஒன்றுமில்லை, என விமர்சிப்பதும் தூற்றுவதும் ஒருவரின் அரசியல் அரிச்சுவடி அறியாமையே என வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான  கி.சேயோன் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் பட்டிருப்பு தொகுதிக்கான  மக்கள் சந்திப்பு காரியாலயம் களுவாஞ்சிகுடி நகரில் திறந்து வைக்கப்பட்டது .,



இந் நிகழ்வில் கலந்து கொண்டு  வாலிபர் முன்னணி தலைவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்,


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்கள் எதனை உணர்த்துகின்றது,
தமிழருக்கான பலம், தமிழரின் உரிமையை, தீர்வை பெற்றுத்தர முடியும் என்று தமிழ் மக்கள் இன்னும் நம்பிக்கையை  தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது மாத்திரமே   கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றது.

ஏன் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்கவில்லை?

பாராளுமன்ற கனவுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பில் நின்றால்தான் வெற்றிபெற முடியுமென்ற புரிதலுடன் மக்களுக்கு அதன் கொள்கையை, உரிமைசார் அபிலாஷைகளை  முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சுய இலாபத்திற்காக இன்று வீட்டுக்கு வெளியே வந்து விமர்சிக்கின்றனர்.,

மக்கள் வாக்களித்தது எதற்க்காக? இவர்கள் இதனை சிந்திக்கவில்லையா?
யார் மக்களை ஏமாற்றுவது?
தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதைச்சொன்னதோ அதைத்தான் சம்மந்தன் ஐயா தலைமையிலான கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டனர் அதற்க்காக வாக்களித்தனர், அபிவிருத்தியை கோரவில்லை, ஆனால் நாம் இன்று அரசை பயன்படுத்தி முடிந்தளவுஅபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.


தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் வீட்டில் தேர்தலில் நின்று  வெற்றிபெறாதவர்கள், தேர்தலுக்கு  வாய்ப்பு கிடைக்காதவர்கள், இனியும் எமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உணர்ந்தவர்களே.

தமிழ் மக்கள் பீனிக்ஸ் பறவை போன்றவர்கள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கூறலாம், 15 கு மேற்பட்ட நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கிய ஆதரவை  கொண்டு ஆயுத போராட்டத்தை மெளனித்த மகிந்த அரசு
மீண்டும் தமிழினம் எழ முடியாது தோற்ற போன  இனம் என்ற அவலமும் ஏளனமும் அதிகார மமதையும் கொண்டு சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்த போது
எந்த பலமும் ஆதரவும் அற்ற அச்சமான சூழ்நிலையில்  வடகிழக்கில்தேசியத்தில் தீராத பற்றுக்கொண்ட மக்களின் ஒத்துழைப்போடு பதினான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொடுத்தவர்தான்  சம்மந்தன் ஐயா.

அந்தபலத்தில் நின்று கொண்டுதான் விமர்சிக்கின்றனர் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பையும் தலைவர் சம்மந்தன் ஐயாவையும் .

மகிந்த ஆட்சி நிலவியிருந்தால் என்ன நிலமை ஏற்பட்டிருக்கும்?
  தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புவோர்.
2015 முற்பட்ட நிலமையை சிந்திக்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு நீதி கோரி அந்த விடயத்தை  ஜக்கியநாடுகள் மனித உரிமை சபை சர்வதேச விசாரணை என கொண்டு சென்றது யார்?

2015 ல் ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்?

சர்வதேசத்துக்கும்  இந்தியாவுக்கும்  போருக்கு முன்பும் போர்க்கு பின்பும் மகிந்த அரசு அளித்த வாக்குறுதி என்ன? 

13பிளஸ் வழங்குவதாக வாக்குறுதி வழங்கி  இறுதியில் 18 தடவைகள் தமிழ்தேசிய கூட்டமைப்பை  பேச்சுவார்த்தைக்கு அழைத்து  தேநீர் வழங்கி ஏமாற்றியதே மிச்சம்,

இத்தகைய
சர்வாதிகார போக்குடன் சென்று கொண்டிருந்த மகிந்த  அரசை சிறுபான்மை சமூகங்களை  ஒன்றினைத்து மிக நுதனமாக கையான்டு ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து  ஜனநாயக சூழலை ஏற்படுத்தியது யார்?

அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஜனநாயகம் மிக்க  சூழலில் தான் இன்று பலர்  தேர்தலுக்கு வாய்ப்புக்களை தேடுகின்றனர் .

இன்றைய ஜனாதிபதி தன் மீது தமிழ் மக்கள் கொண்ட கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இழந்துவிட்டார், காரணம் மக்களின் பங்களிப்போடு நடந்த ஒரு விடுதலைப் போராட்டத்தை போதைப்பொருள் வியாபாரம் செய்தார்கள் என கொச்சைப்படுத்தி பேசியதன் மூலம்.

உலக இராணுவ ஆய்வாளர்களே ஏன் அவர்களோடு போர் புரிந்த இராணுவத்தளபதியே அந்த அமைப்பு போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பு என சான்று பகிர்கின்றனர்.

இவ்வாறான தமிழ் மக்களை பலமிளந்து அரசியல் அனாதைகளாக்க வேண்டுமென்றே
பேரினவாத சக்திகளால் பல நிகழ்ச்சி நிரல்கள் வட கிழக்கில் அண்மைக்காலமாக மிகவும் கூடுதலாக நடைபெறுகின்றது.


எனவேதான் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமென தனதுரையில் குறிப்பிட்டார்.