வவுணதீவில் நடைபெற்ற பிரார்த்தனை

(சிவா)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

சீயோன் தேவாலயம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு மாதங்கள் பூர்த்தியடைந்த நிலையில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நாட்டில் நீடித்த அமைதிவேண்டி அமைதி பிரார்த்தனையும் செய்யப்பட்டது.