குண்டுத்தாக்குதல் நடைபெற்ற இரண்டு மாதங்கள் -நினைவுகூரப்பட்ட உறவுகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல் நிறைவடைந்த இன்றைய தினம் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில் அதில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சின்ன ஊறணியில் இன்று மாலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நாட்டில் நீடித்த அமைதிவேண்டி அமைதி பிரார்த்தனையும் செய்யப்பட்டது.