களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் திடீர் விஜயம்.



ஒரு இலட்சத்து என்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு வைத்திய சேவை வழங்கும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  திடீர் விஜயம்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்  வைத்தியட்சகர், வைத்திய நிபுணர் டொக்டர் றொகான்  மன உளைச்சளுக்கு உள்ளாகி  இடமாற்றம் பெற்று செல்ல முயற்சிப்பதாக  தகவல்கள் வெளியானதை அறிந்த சீ.மூ. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன் உடனடியாக செயற்பட்டு வைத்தியசாலைக்கு ஏற்படப்போகும்  பாரதூரமான பாதிப்பை தடுக்கும் பொருட்டு குறித்த விடயத்தை 
பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

   பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து  வைத்தியட்சகருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின்  குறைபாடுகளையும் விபரமாக கேட்டறிந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் வைத்தியசாலையின் நிருவாகத்தில் தேவையற்ற வெளித்தலையீடுகள்,   பணிபுரியும் வைத்தியர்கள் , ஊழியர்களுக்கு எதிராக தேவையற்ற அநாகரிகமான முறையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளிவந்தமை, கடந்தகாலத்தில் இடம்பெற்றதான முறைகேடுகள், நிதி மோசடிகள் தொடர்பாக பல விடயங்கள்  பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடலை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளினதும், சுகாதார அமைச்சரினதும் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவணசெய்வேன் எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் வைத்தியசாலையின் அபிவிருத்திகுழுவின் முக்கிய நிருவாகிகள், வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கரிசனை கொண்ட பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் என்ன? 
அதற்க்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் என்ன பதில் வழங்கினார்?
விபரம்  விரைவில் ......