அரோகரா கோசத்துடன் குமண சரணாலயம் ஊடாக ஆரம்பமான பாதையாத்திரை –அமைச்சர் மனோவும் பங்கேற்பு

கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்கு வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பாதையாத்திரை செல்லும் அடியார்கள் செல்லும் குமன யால தேசிய சரணாலய காட்டுவழிப்பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது ஜூலை 09 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது.

இன்று காலை தேசிய ஒருமைப்பாடு,அரசகருமமொழிகள்,சமூக வலுவூட்டல்,இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் குமண யால சரணாலய காட்டுப்பாதை பாதையாத்திரைக்காக திறந்துவிடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரர்ளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,காரைதீவு பிரதேசசபை தவிசாளர் சிறீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதியிலும் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான பாதையாத்திரை குழுவினர் தமது பாதையாத்திரையினை கதிர்காமம் நோக்கி ஆரம்பித்தனர்.

இதன்போது அகத்தியர் பெருமான் அருளாசியோடு , அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமியின் பெரும் கருணையினால் – சித்தர்களின் குரல் , அகில உலக மஹா சித்தர்கள் ஏற்பாட்டில், மலேஷியா , பைரவி கன்ஸ்ட்ரக்ஷன் உபயமாக சிவசங்கர் ஜயா, மட்டு தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டிலும் நாளை காலை உகந்தை முருகன் ஆலயத்தில் அனைத்தும் அடியார்களுக்கும் இலவசமாக ருத்திராட்சம் வழங்கப்பட்டது.