போலி அரசியல் தலைமைகள் கருத்தை மக்கள் மதிக்கக்கூடாது.
தமிழர்கள்  நாம் அளவற்ற துன்பங்களை சுமந்தவர்கள்  எவ்வளவுதான் கஸ்ரங்களை அனுபவித்தும் கூட எங்களால் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியாத சூழ்நிலையில் வாழ்கிறோம்.

மீண்டும்மீண்டும் எல்லோராலும் எல்லா விதத்திலும் துன்பமடையும் இனமாக நாம் இருக்கிறோம் நம்மை வைத்து சிலர் வயிற்றுப்பிழைப்பை ஒட்டுகிறார்கள். 

தயவுசெய்து அரசியல் தலைமைகள் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய செயளாலர் சிவஶ்ரீ அ கு .லிகிதராஜக்குருக்கள் .

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஜந்து நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்ட களத்துக்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய செயளாலர் சிவஶ்ரீ அ கு .லிகிதராஜக்குருக்கள் .

  இன்னும் இன்னும் போலி  அரசியல் தலைமைகள்  பேச்சை கேட்காமல் சுயமாக சிந்திப்போம்  தற்போது மக்களால் மதிக்கப்படுகின்ற மதத்தலைவர்கள் வீதியில் இருந்து மக்களின் தீர்வை பெறுகின்ற கால சூழ்நிலை எமது நாட்டின் கேடாக மாறியுள்ளது.

ஆகவே எமது நாட்டில் அக்கறை கொண்ட அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் மதத்தலைவர்களின் நன்மைக்காகவும் நேர்மையான சில முடிவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய செயளாலர் சிவஶ்ரீ அ கு .லிகிதராஜக்குருக்கள் என வேண்டுகோள் விடுத்தார்.