கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத் வேண்டுகோளிற்கமைய ஒதுக்கப்பட்ட 37 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை பூரணப்படுத்துவதற்காக அமைச்சர் மனோ கணேசனால் 32 மில்லியன் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களிற்கான நிதியே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
மட் - பட் - கோவில்போரதீவு விவேகானந்தா வித்தியாலயம் - 07 மில்லியன்
மட் - பண்டாரியாவெளி கலைமகள் மகா வித்தியாலயம் - 05 மில்லியன்
அம்பிளாந்துறை கலாச்சார மண்டபம் - 12 மில்லியன்
மட் - கிரான்குளம் விஸ்னு வித்தியாலயம் - 09 மில்லியன்
இது தொடர்டபாக அமைச்சரின் மட்டு மாவட்ட இணைப்பாளர் கருத்துத்தெரிவிக்கையில்...முழு நாட்டிலும் வாழும் தமிழ் மக்கள் மீது அளவுகடந்த அக்கறையும், அன்பும் கொண்டு தமிழ் மக்களிற்கு ஏற்படுகின்ற சவால்கள் , தடைகள் அனைத்தையும் தனது அரசியல் சாணக்கியத்தினூடாக தகர்த்தெறியும் திறன் கொண்ட அமைச்சர் மனோ கணேசன் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் மீது மிகுந்த சிரத்தையுடன் செயலாற்றுபவர். நான் சந்திக்கும் போதெல்லாம் மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக என்னுடன் மிகவும் காரசாரமான உரையாடல்களைச் செய்பவர். அத்தோடு நிறுத்திவிடாமல் எமது மக்களின் குறைகளை அறிந்து அவற்றை தீர்த்து வைப்பதில் மிகவும் அக்கறையுடையவர. நான் அமது மாவட்டம் தொடர்பான தேவைகளை சமர்ப்பிக்கும் போது அதற்கான நிதியினை வாரி வழங்குவார். அதற்கமைவாக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட 37 மில்லியன் பெறுமதியான நிதி ஒதுக்கீடுகளிற்குரிய அபிவிருத்தித்திட்டங்களை நிறைவு செய்வதற்காக மேலும் 33 மில்லியன் ரூபாவினை எனது வேண்டுகோளிற்கமைய வழங்கியிருக்கின்றார். இவ் வருடமும் பல நிதியொதுக்கீடுகளைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என தெரிவித்தார்.