மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205வது கல்லூரி தினம்

இலங்கையின் முதல் ஆங்கில பாடசாலையென்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியில் கல்லூரியின் 205வது கல்லூரி தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை புளியந்தீவு மெதடிஸ் திருச்சபையில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

1814ஆம் ஆண்டு பிரித்தானியாவை சேர்ந்த அருட்சகோதரர் வில்லியம் ஓல்ட் என்னும் அருட்சகோதரரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை இலங்கையின் ஆங்கில கல்வித்துறைக்கு வித்திட்ட ஒரு பாடசாலையாக கொள்ளப்படுகின்றது.

புளியந்து மெதடிஸ் திருச்சபையில் நடைபெற்ற வழிபாடுகளில் பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் உட்பட பழைய மாணவ சங்கத்தினர்,பாடசாலை அபிவிருத்திக்குழுவினர்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து காந்திபூங்காவில் உள்ள அருட்சகோதரர் வில்லியம் ஓல்டின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.