வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமா நகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவை இனப்பாலும் ஒருங்கே அமையப்பெற்ற நல்விருந்தோம்பும் சீரிய சைவர்குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாகக் கோவில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து வேண்டும் வரங்களை வாரி வழங்கி சிலம்பொலி தந்து உலகையே வியக்கவைத்த  வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் சித்திரைத் திங்கள் 27ம் நாள் 10.05.2019 வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரமும் சஷ்டி திதியும் சித்த நாம யோகமும் கூடிய பகல் 11.55 முதல் 12.24 மணி வரையுள்ள கடக லக்கின சுபவேளையில் கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற கண்ணகி அம்மன் திருவருள் கைகூடியுள்ளதால் பக்த அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகைதந்து கண்ணகி அம்மனின் பேரருளை பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கிரியாகால விபரம்
09.05.2019 (வியாழக்கிழமை)
பி.ப 04.00 மணிமுதல் விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், அனுஞ்ஞை, திரவியசுத்தி, முகூர்த்த பத்திரிகை படனம், மஹா கணபதி ஹோமம், பேரீ தாடனம், லக்ஷ்மி ஹோமம், வாஸ்த்து சாந்தி, மிருத் சப்கிரணம், அங்குரார்ப்பணம், ரக்சா பந்தனம், கடஸ்த்தாபனம், கும்பயாக சாலா பிரவேசம், யாக பூஜை, அக்கினி கார்யம், தீபாராதனை, தூபிஸ்தாபனம், கோவாசம், தீபஸ்தாபனம், பிரசாதம் வழங்கல்.
10.05.2019 (வெள்ளிக்கிழமை)
காலை 08.00மணி முதல் விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், யாக பூஜை, விஷேட திரவிய ஹோமம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, நால்வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணம், ஆசீர்வாதம், தானாதிகள், அந்தர்பலி, பகிர்பலி சர்வமங்கள வாத்திய சகிதம், பிரதான கும்பம் வீதிப் பிரதட்ணம், பகல்11.55மணி முதல் 12.24மணி வரையுள்ள கடக லக்கின சுபவேளையில் அழகிய சுந்தர விமானத்திற்கு கும்பாபிஷேகம், திருக்கதவம் காப்பாடல், யாக உத்வாசனம், எஜமான் அபிஷேகம், கர்ப்பாபரண அபிஷேகம், பிரதமகுரு ஆசியுரை, பிரசாதம் வழங்கல்
இந்தியா மற்றும் இலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 10.05.2019 காலை 07.00மணிக்கு பவனியாக எடுத்து வரப்பட்டு உலகிலேயே எங்கும் இல்லாத வண்ணம் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான 21அடி கண்ணகி அம்மன் திருவுருவச் சிலைக்கு சொரியப்படவுள்ளது.
கும்பாபிஷேக பிரதமகுரு
சிவாகம வித்யா பூஷணம், சிவாச்சார்ய திலகம், பிரதிஷ்டா திலகம், ஜோதிட வித்யா தத்துவநிதி, சக்தி உபாசக சாகரர், விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் (காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு, திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய பிரதம குரு)
சர்வ சாதகாசிரியர்கள்
ஆரிய பாஷா வம்பன்னர், சாதக சாகரர், கிரியா திலகம்
சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் (களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு)
கிரியா ஜோதி, சாதக திலகம், சாதக சாகரர்
சிவஸ்ரீ சண்முக சத்தியேந்திரா குருக்கள் (யாழ்ப்பாணம் பொலிகண்டி ஞானவைரவர் ஆலய பிரதம குரு)
ஆலய பிரதம பூசகர்
வேலாயுதம் சதாசிவம் தலைமையிலான உதவிப் பூசகர்கள்
ஆலய கட்டட நிர்மாணம்
ஸ்தபதி க.ரமேஸ்குமார், ஜெ.ஜக்சன் குழுவினர் (வந்தாறுமூலை)
திருவுருவச் சிலை வடிவமைப்பு
கலைஞான சிற்ப வாருதி வ.அசோக்குமார்
(நாகப்பட்டினம், தமிழ்நாடு)
ஆலய வர்ணக்கலை
வர்ணக் கலா ஞானமணி சி.சிவநாதன்(வரதன்) குழுவினர் (சித்தாண்டி)
மங்கள வாத்தியம்
எஸ்.நிஷாந்தன் குழுவினர் (மட்டக்களப்பு)
பூமாலை அலங்காரம்
சூடி மகிளும் செம்மல் திரு.தா.வடிவேல்  (வந்தாறுமூலை, குருக்கள்மடம்)
ஒலி, ஒளி ஒழுங்கமைப்பு
வந்தாறுமூலை வி.எம் இசைக்குழு
தாகசாந்தி ஒழுங்கமைப்பு
வந்தாறுமூலை இளையோர் அமைப்பு
கும்பாபிஷேக தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தருகின்ற பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபை மற்றும் ஆலய புனருத்தாரண குழுவினர்
அனைவரும் வருக! அன்னையின் திருவருள் பெறுக.