பொத்துவிலில் சிக்கிய போதைவஸ்து வியாபாரிகள்

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் நேற்று அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்களம் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின்போது கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

கல்முனை மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் அம்பாறை மதுவரித்திணைக்களமும் இணைந்து இந்த திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மூன்று பேரிடம் இருந்து 130மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் ஏனைய நால்வரிடம் இருந்து கேரளா கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.