மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள நடந்த செயல் -அச்சத்தில் வர்த்தகர்கள்

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு இனந்தெரியாதவர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்முனை பிரதான வீதியில் அரசடிப்பகுதியில் உள்ள சீசிரி கமராக்கள் பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்றிலேய இந்த தீவைப்பு சம்பவம் நடைபெற்றது.

வர்த்தக நிலையத்தின் ஒரு பக்க கதவினை உடைத்துச்சென்று வர்த்தக நிலையத்திற்குள் தீவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வர்த்தக நிலையத்திகுள் இருந்த பொருட்களின் ஒரு பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.

சீசிரிவி கமராவுக்குரிய கணிணியின் கார்ட் டிஸ்கும் இதன்போது வந்தவர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்தலத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்தரன் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலும் உள்ள குறித்த வர்த்தக நிலையம் உள்ளபோதிலும் துணிகரமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மட்டக்களப்பில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.