சித்தாண்டி உதயன்மூலை வீதி செப்பனிடும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடுசித்தாண்டி உதயன்மூலை பேச்சியம்மன் ஆலய வீதி செப்பனிடும் பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அவர்களினால் இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீடு.

குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கான வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது .

இந்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிளைக்குழு உறுப்பினர்கள்,  பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளரும்
சித்தாண்டி மேற்கு கிளைக்குழு உறுப்பினருமான கே. சோபனன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.