உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு உதிரம் கொடுத்து அஞ்சலி.(சசி துறையூர்  )
கொடிய பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான  உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் ஒரு மாத நிறைவை நினைவு கூறும் முகமாக  உயிர் நீத்த உறவுகளுக்காய் இரத்த தானம் வழங்கி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று(2019.05.21) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட  பணிமனையில் குறித்த நிகழ்வு  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ம.பிரியங்கன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றி உயிரிழந்த உறவுகளுக்காய் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் இரத்ததானமும் வழங்கினர்.

நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளும், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர்களுக்கும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.