மட்டு நகரில் இடம்பெற்ற பாவச் செயல் - நினைவு கூர்ந்த மட்டு தமிழ் இளைஞர்கள்.


(சசி துறையூர்) 
கடந்த ஏப்ரல் மாதம்  21திகதி உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது மட்டக்களப்பு சீயோன் இறை இல்லத்தில்  பாவிகளின் ஈனச்செயலால்  உயிரிழந்தோரின் ஒரு மாத நிறைவை முன்னிட்டு
மட்டு தமிழ் இளைஞர்கள்  அமைப்பால்    ஹரி சிறுவர் இல்லத்திலும் , மற்றும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மட்டு தமிழ் இளைஞர்களால் பொதுமக்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டது.